ஏர் இந்தியா விமானத்தால் உடைந்த வழிகாட்டும் கருவியை சரி செய்யும் பணி துவக்கம்

ஏர் இந்தியா விமான விபத்தில் சேதமடைந்த விமானங்களுக்கு வழிகாட்டும் கருவியை சரிசெய்யும் பணியை, தொழில்நுட்ப பணியாளர்கள் தொடங்கியுள்ளனர்.
ஏர் இந்தியா விமானத்தால் உடைந்த வழிகாட்டும் கருவியை சரி செய்யும் பணி துவக்கம்
x
திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்-க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த 12ஆம் தேதி நள்ளிரவு, விமானங்களுக்கு வழிகாட்டும் கருவி மற்றும் சுற்றுச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரி தினேஷ்குமார் யாதவ் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி, டெல்லியில் உள்ள விமான போக்குவரத்து இயக்குனரகத்துக்கு அறிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில், சேதமடைந்த கருவியை சரிசெய்யும் பணியை, தொழில்நுட்ப பணியாளர்கள் தொடங்கியுள்ளனர். இந்தப் பணி இன்னும் சில நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது. தற்போது வி.ஓ.ஆர், பாப்பி போன்ற கருவிகள் உதவியுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்