டெங்கு காய்ச்சல் : மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவு

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
டெங்கு காய்ச்சல் : மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவு
x
டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்கி இருக்கக் கூடாது, கழிப்பறைகளை சுத்தமாக வைக்க வேணடும், தரமான குடிநீர் வழங்க வேண்டும், காய்ச்சல் குறித்தும், அதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் காலை வணக்க கூட்டத்தில் விளக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்