விழுப்புரம் : ஏரியில் மூழ்கி 2 பள்ளி மாணவிகள் பலி

விழுப்புரம் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழந்தனர்.
விழுப்புரம் : ஏரியில் மூழ்கி 2 பள்ளி மாணவிகள் பலி
x
விழுப்புரம் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழந்தனர். திண்டிவனத்தை அடுத்த முன்னூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் எழிலரசி மற்றும் ரிந்தியா குளிப்பதற்காக முன்னூர் ஏரிக்கு சென்றனர். அப்போது, ஏரியில், மணல் அள்ளப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து இருவரும் உயிரிழந்தனர். தகவலறிந்த பிரம்மதேசம் போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்