முத்தாரம்மன் கோயில் தசரா விழா : கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலத்தில் வீதியுலா

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழாவின் 8-ஆம் நாளான நேற்று இரவு கமல வாகனத்தில், கஜலட்சுமி கோலத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.
முத்தாரம்மன் கோயில் தசரா விழா : கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலத்தில் வீதியுலா
x
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழாவின் 8-ஆம் நாளான நேற்று இரவு கமல வாகனத்தில், கஜலட்சுமி கோலத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. முன்னதாக, சப்பரத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.  இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 செங்கல்பட்டில் தசரா விழா : ஓரே நாளில் 2 லட்சம் மக்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே சின்னக்கடையில் 10 நாள் தசரா திருவிழாவையெட்டி பல்வேறு தோற்றத்தில் அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் அலங்காரம் செய்யப்பட்டு. சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த பகுதியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு விதவிதமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் பல்வேறு வகையான ராட்டினங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

ராமேஸ்வரம் : மகிஷாசுர மர்த்தினி  கோலத்தில் அம்பாள் பர்வதவர்த்தினி

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் நவராத்திரி உற்சவ விழாவின் எட்டாவது நாள் நிகழ்வாக நேற்று அம்பாள் பர்வதவர்த்தினி மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனையடுத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. உள்ளூர் மற்றும் வடமாநிலங்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள் அம்பாளை தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்