பயன்பாட்டுக்கு வந்த 4 மாதத்தில் பழுதடைந்த பாம்பாற்று பாலம்

பயன்பாட்டுக்கு வந்து 4 மாதமே ஆன உயர்மட்ட மேம்பாலம் பழுதடைந்ததால், கிராம மக்கள் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர்.
பயன்பாட்டுக்கு வந்த 4 மாதத்தில் பழுதடைந்த பாம்பாற்று பாலம்
x
புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை இணைக்கும் பாம்பாற்று உயர்மட்ட பாலம் 5 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இந்த பாலத்தை காணொலி காட்சி மூலம் ஜூன் மாதம் நான்காம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பாலம் பயன்பாட்டுக்கு வந்த 4 மாதங்களில், பாம்பாற்று உயர்மட்ட பாலம் மற்றும் இணைப்பு சாலை  பழுதாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பேயாடி கோட்டையில் இருந்து சிறுகாம்பூர், வெள்ளையாபுரம் வழியாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை இணைக்கூடிய இந்த சாலை மற்றும் உயர்மட்ட பாலம் பழுதடைந்து உள்ள நிலையில், 30 கிராம மக்கள் அச்சத்துடன் பயணித்து வருவதாக தெரிவித்தனர். அரசு விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்