முதியவரிடம் செல்போன் பறித்த விவகாரம் : 3 இளைஞர்கள் சிக்கினர்

முதியவரிடம் செல்போனை பறித்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிய சம்பவத்தில், இளைஞர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதியவரிடம் செல்போன் பறித்த விவகாரம் : 3 இளைஞர்கள் சிக்கினர்
x
சென்னை வளசரவாக்கத்தில் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த ஜெயபாண்டியன் என்ற முதியவரிடம் வழி கேட்பது போல நடித்த இளைஞர்கள், திடீரென அவரது சட்டை பையில் இருந்து செல்போனை பறித்து சென்றனர். அதிர்ச்சியடைந்த முதியவர் தனது செல்போனை காப்பாற்றுவதற்காக பைக்கை பிடித்து தொங்கினார். இதனை கண்டுகொள்ளாத இளைஞர்கள் பைக்கில் வேகமாக தப்பிச்சென்றனர். இதில் சாலையில் சிறிது தூரம் முதியவர் இழுத்துச்செல்லப்பட்டார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், செல்போன் பறித்து சென்ற விருகம்பாக்கத்தை சேர்ந்த சக்திவேல், சிவா, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்