வைரமுத்து சர்ச்சை - ஆண்டாள் பிரச்சினையின் விஸ்வரூபமோ? - கருணாஸ்

வைரமுத்து ஆண்டாள் சர்ச்சையில் சிக்கியதால், இது ஆண்டாளின் விஸ்வரூபமாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக கருணாஸ் தெரிவித்தார்.
வைரமுத்து சர்ச்சை - ஆண்டாள் பிரச்சினையின் விஸ்வரூபமோ? - கருணாஸ்
x
சென்னை ஆழ்வார்பேட்டையில், உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை, நடிகர் கருணாஸ் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம் கைது செய்யப்பட்ட போது, தமக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் என்ற முறையில் நன்றி தெரிவித்ததாக கூறினார். தொடர்ந்து வைரமுத்து குறித்த  கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆண்டாள் சர்ச்சையில் சிக்கியதால், இது ஆண்டாளின் விஸ்வரூபமாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்