தமிழை உயிரென கருதுபவர்கள் தமிழர்கள் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

தமிழை மொழியாக கருதாமல் உயிராக கருதுபவர்கள் தமிழர்கள் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழை உயிரென கருதுபவர்கள் தமிழர்கள் - துணை முதல்வர்  ஓ.பன்னீர் செல்வம்
x
சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழியக்கம் தொடக்க விழாவில் நடைபெற்றது. இதில் தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் , பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன் , பொன்.ராதாகிருஷ்ணன் , அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

பின்னர் விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திராவிட மொழி குடும்பம் மிகவும் பழமையானது என்றார். அதிலும் தனி சிறப்பு கொண்ட  தொன்மையான மொழி, தமிழ் என்றும், தமிழர்கள், தமிழை மொழியாக கருதாமல், உயிராக கருதுபவர்கள் எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்