கொரட்டூர் ஏரியில் 50 ஏக்கர் அரசு நிலம் மீட்பு

சென்னை கொரட்டூர் ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதன் மூலம் அரசுக்கு சொந்தமான 350 கோடி ரூபாய் மதிப்புள்ள 50 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
கொரட்டூர் ஏரியில் 50 ஏக்கர் அரசு நிலம் மீட்பு
x
சென்னை கொரட்டூர் ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதன் மூலம் அரசுக்கு சொந்தமான 350 கோடி ரூபாய் மதிப்புள்ள 50 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 * சென்னையில் உள்ள 29 ஏரிகளில் ஒன்றான கொரட்டூர் ஏரியில்,  ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி கடந்த 13,14 ஆகிய தேதிகளில் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

* காவல், தீயணைப்பு, வருவாய், பொதுப்பணி, மாநகராட்சி உள்பட அரசின் 8 துறைகள் இணைந்து ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.

* கொரட்டூர் ஏரியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட 567 குடும்பங்களில், தகுதியான 437 குடும்பத்தினருக்கு பெரும்பாக்கத்தில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மறுகுடியமர்த்தலுக்கு 5 ஆயிரம் ரூபாய், மூன்று நாட்கள் உணவு செலவு 3 ஆயிரம் ரூபாய், ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் பிழைப்பூதியம் 2,500 ரூபாய் உள்ளிட்டவற்றை வழங்க அரசிடம் பரிந்துரைக்கப்படும  என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

* வெள்ளத்தினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படையாமல் தடுக்கும் நோக்கத்துடன், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்