திருச்சி விமானத்தில் ஏ.சி. இயந்திரம் கோளாறு : 'மீண்டு'ம் பிழைத்த பயணிகள்

திருச்சியிலிருந்து சிங்கப்பூர் புறப்படவிருந்த விமானத்தில் குளிர்ச்சாதன இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது கடைசி நேரத்தில் கண்டறியப்பட்டதால் 115 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருச்சி விமானத்தில் ஏ.சி. இயந்திரம் கோளாறு : மீண்டும் பிழைத்த பயணிகள்
x
திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை, 4 மணிக்கு, சிங்கப்பூர் புறப்பட்ட, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், பயணிகளுக்கான ஏ.சி., இயந்திரம்  பழுதானது. இதனால், விமானம் ஓடுதளத்தில் கிளம்பும் கடைசி நிமிடத்தில் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, பயணிகள் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையிலிருந்து டில்லி சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் ஏ.சி இயந்திரம் பழுதானதால், பயணிகளுக்கு காதில், மூக்கில் ரத்தம் வந்து உடல்நிலை பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

திருச்சியில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு, ஏர் இந்தியா விமானம் சுற்றுச்சுவரில் மோதிய நிலையிலும், 136 பயணிகள் உயிர் பிழைத்த பிழையில், தற்போது'டேக் ஆப்' ஆகும் நேரத்தில் நிகழவிருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்