புதிய வாக்காளர்கள் எத்தனை பேர்? - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க 11 லட்சத்து 91 ஆயிரத்து 875 பேர் விண்ணப்பித்துள்ளதாக, தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
புதிய வாக்காளர்கள் எத்தனை பேர்? - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
x
* தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அன்று முதல், அக்டோபர் 31 ஆம் தேதி வரை திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் சார்பில் செப்டம்பர் 9 மற்றும் 23, அக்டோபர் 7 மற்றும் 14 ஆகிய நாட்களில் சிறப்பு சரிபார்ப்பு முகாம் நடத்தப்பட்டது. ஆன்-லைன் மூலமும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 

* இந்நிலையில், 14ம் தேதி வரை செய்யப்பட்ட திருத்தங்களின் விவரங்களை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டுள்ளார். 

* புதிதாக பெயர் சேர்க்க, 11 லட்சத்து 91 ஆயிரத்து 875 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அதிகபட்சமாக சென்னையில் 80 ஆயிரத்து 231 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரியில், 6 ஆயிரத்து 675 பேரும் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

* மேலும், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் மேற்கொள்ள, மொத்தம் 16 லட்சத்து 21 ஆயிரத்து 838 பேர்  விண்ணப்பித்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். 

* அக்டோபர் 31 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும், இறுதி வாக்களர் பட்டியல் ஜனவரி 4ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்