மீனவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் - ஸ்டாலின்

தமிழக மீனவர்களின் போராட்டத்தை அ.தி.மு.க அரசு உதாசீனப்படுத்துவது கடும் கண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் - ஸ்டாலின்
x
* தமிழக மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 3 முதல் ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் நடத்திய காலவரையறையற்ற போராட்டத்தை அரசு உதாசீனப்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

* மீன்பிடிக்கச் செல்லும் போதெல்லாம் இலங்கைக் கடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, ஆபத்தில் சிக்கும் சூழலில், கோரிக்கைகள் குறித்து மீன்வளத்துறை அமைச்சரோ அல்லது முதலமைச்சரோ மீனவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

* கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் வரும் 25 ஆம் தேதி முதல் மீண்டும் காலவரையறையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

* பிரதமருக்கு உரிய வகையில் அழுத்தம் கொடுத்து, தமிழக மீனவர்களின் படகுகளைப் பறிக்கும் இலங்கை அரசின் அராஜகச் செயலைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்