பவானி ஆற்றில் கலக்கும் கழிவுநீர் : ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இக்கரை தத்தப்பள்ளி கிராமம் அருகே, நிலத்தடி பள்ளத்தில் இருந்து வெள்ளை நுரைகளுடன் கழிவு நீர் பவானி ஆற்றில் கலப்பதால் காகித ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
பவானி ஆற்றில் கலக்கும் கழிவுநீர் : ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  இக்கரை தத்தப்பள்ளி கிராமம் அருகே, நிலத்தடி பள்ளத்தில் இருந்து வெள்ளை நுரைகளுடன் கழிவு நீர் பவானி ஆற்றில் சென்று கலப்பதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். நேற்று இரவு பெய்த மழையின் போது அப்பகுதியில் உள்ள காகித ஆலைகள், தேக்கி வைக்கப்பட்டிருந்த கழிவு நீரை பள்ளம் மற்றும் ஓடைகளில் திறந்து விட்டிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்