2016-ம் ஆண்டில் சேலம் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

2016-ம் ஆண்டில் சேலம் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வடமாநில கொள்ளையர்கள் 2 பேர் கைது.
2016-ம் ஆண்டில் சேலம் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது
x
சேலம் ரயிலில், 5 கோடியே 78 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், வடமாநில கொள்ளையர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* 2016-ம் ஆண்டு, ஆகஸ்ட் 8-ம் தேதி சேலம் - சென்னை எழும்பூர் விரைவு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட 342 கோடி ரூபாயில், 5 கோடியே 78 லட்சம் ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டன.

* இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார், வடமாநிலங்களை சேர்ந்த பிரபல கொள்ளையர்கள் தினேஷ், ரோஹன் பார்தி ஆகியோரை நேற்று கைது செய்துள்ளனர்.

* சின்ன சேலத்திற்கும், விருத்தாசலத்திற்கும் இடையே ரயில் பெட்டி மேற்கூரையை துளையிட்டு கொள்ளையடித்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

* விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இறங்கி காத்திருந்த மேலும் ஐந்து பேருடன், கொள்ளையர்கள் மத்திய பிரதேசம் தப்பி சென்றதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

 Next Story

மேலும் செய்திகள்