நிர்மலா தேவி விவகாரம்: ஆளுநர் மாளிகை விளக்கம்

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநருக்கு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ அச்சுறுத்தல் விடுக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிர்மலா தேவி விவகாரம்: ஆளுநர் மாளிகை விளக்கம்
x
நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநருக்கு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ அச்சுறுத்தல் விடுக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், பேராசிரியர் நிர்மலா தேவி, ஆளுநர் மாளிகைக்கு இதுவரை வந்ததே இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆளுநருக்கோ, ஆளுநர் அலுவலக அலுவலர்களுக்கோ நிர்மலா தேவியுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

மதுரையில் அன்னை தெரசா பல்கலைக் கழகத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட விருந்தினர் மாளிகைக்கு ஆளுநர் செல்லவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உண்மை அறியாமல் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும், இந்த வழக்கில் சட்டப்பூர்வமான விசாரணை நடந்து வந்ததால் 6 மாதத்திற்கும் மேலாக ஆளுநர் மாளிகை மௌனம் காத்து வந்தது அதில் கூறப்பட்டுள்ளது. ஆளுநருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ அச்சுறுத்தல் விடுக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், ஆளுநரின் நன்மதிப்பை கெடுக்கும் செயல்களுக்கு ஆளுநரின் அலுவலகம் ஒருபோதும் அடிபணியாது என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.



நிர்மலா தேவி விவகாரம்: ஆளுநர் மாளிகை விளக்கம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் கருத்து 



ஆளுநர் மாளிகையின் அறிக்கைக்கு யாரும் அஞ்ச மாட்டார்கள் - முத்தரசன் 


ஆளுநர் எதை செய்தாலும் அதன் மீது குற்றம்சாட்டுவது வாடிக்கையாக மாறி விட்டது - சி.பி.ராதாகிருஷ்ணன்


நிர்மலா தேவி விவகாரம்: ஆளுநர் மாளிகை விளக்கம் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து 





Next Story

மேலும் செய்திகள்