மனைவியை கொன்று விட்டு பயத்தில் தற்கொலை செய்த கணவர்
பதிவு : அக்டோபர் 11, 2018, 02:31 PM
மனைவியை கொலை செய்து விட்டு கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் துர்கா என்பவரும் சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்த நிலையில், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், குழந்தைகளை துர்காவின் தாய் மீராபாய் அழைத்துச் சென்றுள்ளார். இன்று காலை குழந்தைகளை அழைத்துக் கொண்டு மீராபாய் வந்துள்ளார். அப்போது, வெங்கடேசன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருக்க, அவருக்கு கீழே துர்கா பிணமாகக் கிடந்தார். இதையடுத்து மீராபாய் அளித்த தகவலின் பேரில், போலீசார் வந்து இருவரின் உடலையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன், மனைவியிடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது, துர்காவை தலையணையால் வெங்கடேசன் அழுத்திக் கொலை செய்து விட்டு  போலீசாருக்கு பயந்து தானும் தற்கொலை செய்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

விமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்

சென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.

1594 views

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

240 views

ரூ.5000 கோடி பாக்கி தொடர்பான நிஷான் நிறுவனம் தொடர்ந்த வழக்கு - இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்

தமிழக அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி தொகை தர வேண்டும் என சர்வதேச நிறுவனங்களின் நீதிமன்றத்தில் நிஷான் கார் நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

554 views

கடலில் தத்தளித்த மீனவர்கள் 9 பேரை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்

கடலில் தத்தளித்த மீனவர்கள் 9 பேரை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்

178 views

பிற செய்திகள்

அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நியமனம் : மூத்த வழக்கறிஞர் நடராஜன் நியமித்து உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை சார்பில் ஆஜராவதற்கு, தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜனை தமிழக அரசு நியமித்துள்ளது.

5 views

பன்றிக்காய்ச்சல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - அன்புமணி அறிக்கை

பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தமிழக அரசு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

20 views

தமிழக காவல்துறையினர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

கடந்த ஆண்டு நவம்பரில் திகார் சிறையில் நடந்த கலவரம் தொடர்பாக, தமிழக காவல் துறையினர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது

11 views

அறிவியல் எழுத்தாளர் ராமதுரை உடல்நலக்குறைவால் காலமானார்

தமிழில் அறிவியல் நூல்கள் பலவற்றை எழுதியவர் பத்திரிகையாளராகவும் பணியாற்றியவர் ராமதுரை சிறந்த அறிவியல் எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்றவர்

60 views

ஐ.ஜி. மீது பெண் போலீஸ் எஸ்.பி. கொடுத்த புகார் - விளக்கம் கேட்டு தலைமை செயலாளருக்கு கடிதம்

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி மீது பெண் போலீஸ் எஸ்.பி. அளித்த பாலியல் புகார் தொடர்பாக, விளக்கம் கேட்டு, தமிழக தலைமைச் செயலாளருக்கு, பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

13 views

"சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் : உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுவோம்" - பினராயி விஜயன்

சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றப்போவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.