"யானைகள் நாட்டில் வாழும் உயிரினம் அல்ல" - உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

யானைகள் நாட்டில் வாழும் உயிரினம் அல்ல என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
யானைகள் நாட்டில் வாழும் உயிரினம் அல்ல - உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
x
சென்னையை சேர்ந்த ஆண்டனி கிளமன்ட் ரூபின் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், சமயபுரம் கோவில் யானை மசினி, முதுமலையில் நன்றாக இருந்ததாகவும் 2016ம் ஆண்டில் கோவிலுக்கு வந்தபின் மாற்றம் ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார். மேலும், பாகன் கஜேந்திரனை கடந்த மே மாதம் மிதித்து கொன்றதால், யானையை  வனப்பகுதிக்கு அனுப்புமாறும் ஆண்டனி கிளமன்ட் கூறி இருந்தார். 

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன் நடைபெற்றது. அப்போது, 'கோவில்களில் பாரம்பரியமாக இருந்து வருவதால், யானை வளர்ப்பதை தடை செய்ய முடியாது என அறநிலைய துறை தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு, 'யானைகள் நாட்டில் வாழ்பவை அல்ல, காட்டில் வாழும் வன விலங்கு' என நீதிபதிகள் கூறினார்கள். மேலும் சமயபுரம் யானை மசினிக்கு அளிக்கும் சிகிச்சை குறித்து ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் அக்டோபர் 29ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையையும் அன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்