உதகை மலை ரயில் கட்டணம் பலமடங்கு உயர்வு....

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு செல்லும் மலை ரயில் சாதாரண கட்டணம் ரூ.15ல் இருந்து ரூ.75 ஆனது.
உதகை மலை ரயில் கட்டணம் பலமடங்கு உயர்வு....
x
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக, 7 ந் தேதி முதல் 9 ந் தேதி வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. தற்போது, மழை குறைந்துள்ளதால், இன்று மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இதற்கிடையே, மலை ரயில் கட்டணம் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 15 ரூபாயாக இருந்த சாதாரண கட்டணம், 75 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல் வகுப்பு கட்டணம் 470 ரூபாயாகவும், இரண்டாம் வகுப்பு கட்டணம் 145 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு, மலை ரயில் போக்குவரத்து நஷ்டத்தை சரி செய்யும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்