பார்ப்பதற்கு தத்ரூபமாக காட்சி தரும் கோலங்கள் : 800க்கும் மேற்பட்ட வண்ணங்களில் அசத்தும் பெண்

கோலங்களில் இத்தனையும் சாத்தியமா? என ஆச்சரியப்படும் வகையில் அசத்தி வருகிறார் தேனியை சேர்ந்த ஒரு பெண்
பார்ப்பதற்கு தத்ரூபமாக காட்சி தரும் கோலங்கள் : 800க்கும் மேற்பட்ட வண்ணங்களில் அசத்தும் பெண்
x
படத்தில் நீங்கள் பார்ப்பதற்கு ஓவியம் போல தான் இருக்கும். ஆனால் இந்த கண்கவர் சித்திரங்கள் எல்லாம் ஓவியங்கள் அல்ல. கோலங்கள் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.புள்ளி வைத்து கோலம் போடுவது, ரங்கோலி கோலங்களுக்கு மத்தியில் இத்தனை தத்ரூபமான ஓவியங்களை கோலப்பொடியில் கொண்டு வந்து அசத்தியிருக்கிறார் தேனியை சேர்ந்த அமிர்தா.. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் இவருக்கு சிறுவயதில் இருந்தே கோலங்கள் போடுவதின் மீது தீராத ஆர்வம்.. அதை முழுமூச்சாக கொண்டு செயல்பட்டு வந்த இவர் இன்று அந்த துறையில் தனித்துவம் பெற்றிருப்பதே சிறப்பு...கோலப் பொடிகளை கொண்டு கண்கவர் கோலங்கள் வரைவது தான் இவரது சிறப்பம்சம்.. இதற்காக அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார் அமிர்தா... அதிக பட்சம் 10 வண்ணங்களில் கோலப் பொடிகளை பார்த்த நமக்கு இவரிடம் 800க்கும்  மேற்பட்ட வண்ணங்கள் குவிந்து கிடக்கிறது ஆச்சரியமாகவே இருக்கிறது. நமக்கு எளிதாக கிடைக்கும் பொருட்களை கொண்டும் செய்யலாம் என்பதை செயலில் கொண்டு வந்த அமிர்தா விதவிதமான மண்களை கொண்டு கோலத்திற்கு வண்ணம் தீட்டி வருகிறார். ஒரு வண்ணத்தை எடுத்துக் கொண்டால் அதிலும் குறைந்தது 80 ஷேட்களை வைத்து கோலத்திற்கு கூடுதல் அழகு சேர்ப்பது தனிக்கலை. அதை திறம்பட செய்து வருகிறார் அமிர்தா...தை மாதம் முதல் நாளன்று 16 மணி நேரம் சுவாமி படத்தை கோலப் பொடியால் வரைவது இவரின் பல வருட பழக்கம். இந்த பணியை ஒரு தவம் போல கருதி தன் முழு ஈடுபாட்டையும் இதில் செலுத்தி வருகிறார்.. பள்ளியில் ஆசிரியப் பணி ஒரு பக்கம் இருந்தாலும் விடுமுறை நாட்களில் எல்லாம் கோலத்திற்காக தனி நேரம் ஒதுக்குவது இவரின் வழக்கம். நாம் செய்வதை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இதுவரை ஆயிரக்கணக்கான கோலங்களை படைத்திருக்கிறார் இந்த பெண்மணி.. கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அளவிற்கு தத்ரூபமான ஓவியங்களை கோலங்களாக கொண்டு வந்த இவருக்கு பாராட்டுகளும் பல தரப்பில் இருந்து குவிந்து வருகிறது... 




Next Story

மேலும் செய்திகள்