நவராத்திரி விழா : விற்பனைக்கு வந்துள்ள கண்கவர் கொலு பொம்மைகள்...

நாடு முழுவதும் நவராத்திரி விழா தொடங்கியுள்ள நிலையில் கண்கவர் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
நவராத்திரி விழா : விற்பனைக்கு வந்துள்ள கண்கவர் கொலு பொம்மைகள்...
x
புரட்டாசி மாதம் , மகாளய அமாவாசையை தொடர்ந்து வரக்கூடிய ஒன்பது தினங்களும் நவராத்திரி விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரி விழாவில் பெண் தெய்வங்களை போற்றும் வகையில் 9 தினங்களும் வழிபாடு நடத்தப்படும். அந்த வகையில் நவராத்திரி திருவிழா தொடங்கியுள்ள நிலையில் கொலு வைப்பதற்கான பணிகளில் பலரும் ஆர்வம் காட்டுவது வழக்கம். அவர்களுக்காகவே சந்தைக்கு கண்கவர் பொம்மைகள் வரத் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு புதுவரவாக பஞ்சாமிர்த பெருமாள், பாகுபலி விநாயகர்கள் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் குழந்தைகளை கவரும் வகையில் கண்கவர் கார்ட்டூன் பொம்மைகளும்  விற்பனைக்கு வந்துள்ளது. நவராத்திரி பண்டிகைக்காக ஒவ்வொரு ஆண்டும் புது பொம்மைகளை வாங்க வேண்டும் என்ற சம்பிரதாயம் மக்களிடையே உண்டு. அதற்கு ஏற்றார் போல இந்த ஆண்டு புதுவரவாக உள்ள பொம்மைகளை ஏராளமானோர் வாங்கிச் செல்கின்றனர்...அதேநேரம் பிளாஸ்டிக், பீங்கான் போன்றவற்றால் செய்யப்பட்ட பொம்மைகளுக்கு பதிலாக மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளை வாங்கினால் தங்களின் வாழ்வாதாரம் மேம்படும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Next Story

மேலும் செய்திகள்