காட்டு எருமைகளுடன் இணைந்து வாழும் தொழிலாளர்கள்

கோத்தகிரி பகுதியில், காட்டு எருமைகளுடன் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இணைந்து வாழ்வது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
காட்டு எருமைகளுடன் இணைந்து வாழும் தொழிலாளர்கள்
x
நீலகிரி மாவட்டத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி, குடியிருப்பு பகுதிகளுக்குள் வன விலங்குகள் நுழைவதோடு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. கோத்தகிரி அருகே தேயிலை தோட்டம் ஒன்றில்,  முப்பதுக்கும் அதிகமான காட்டெருமைகளுடன் தோட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் காட்டெருமைகளை கண்டு பயந்த அவர்கள், பிறகு அவற்றின் அருகிலேயே தங்கள் வேலைகளை பார்க்க பழகி கொண்டனர். காட்டெருமைகளும் தேயிலை பறிக்கும் தொழிலாளர்களை தாக்காமல் தோட்டத்தில் அமைதியாக சுற்றித் திரிந்து மேய்ச்சலில் ஈடுபடுகின்றன. இது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்