தமிழகத்தில் பரவலாக மழை...
பதிவு : அக்டோபர் 07, 2018, 09:32 AM
மாற்றம் : அக்டோபர் 07, 2018, 11:21 AM
தமிழகத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது .
சென்னை:

சென்னையில் இன்று அதிகாலையில் கனமழை பெய்தது. சென்ட்ரல், சைதாப்பேட்டை, எழும்பூர், கோடம்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கிண்டி, அயனாவரம், அமைந்தகரை, வில்லிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவில் மழை பெய்தது. 
கோரம்பள்ளம், வாகைக்குளம்,  மீளவிட்டான், துறைமுகம் ஆகிய பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர், திருநெல்வேலி செல்லும் சாலைகள் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.

ஊட்டி :

ஊட்டியில் பெய்த கனமழையால், கோத்தகிரி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்ததால், மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது. அவற்றை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் :

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக நாமக்கல் அருகே முதலைபட்டி பகுதியில் மாலையில் சுமார் அரைமணி நேரம் கன மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  வயல்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

மிடுக்கான தோற்றம், கனிவான குணம் : காத்திருந்து கொள்ளையடிக்கும் நூதன திருடன் கைது

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

512 views

விமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்

சென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.

2222 views

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

567 views

பிற செய்திகள்

வெளிநாட்டைச் சார்ந்தவர் பாலியல் தொந்தரவு - நடிகை நிலானி புகார்

வெளிநாட்டை சேர்ந்த மென் பொறியாளர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை தருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை நிலானி புகார் மனு அளித்துள்ளார்.

2 views

ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியான தமிழர்

தமிழகத்தை சேர்ந்த ஒருவர் ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

12 views

வழக்கறிஞரை தாக்கிய மகளிர் காவல் ஆய்வாளர் : காவல் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து டிஐஜி உத்தரவு

திண்டுக்கல்லில் கடந்த 17-ம் தேதி வழக்கறிஞர் தியாகுவை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தி தாக்கியதாக கூறப்படுகிறது.

9 views

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வை ரத்து செய்ய கோரும் வழக்கு : வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்ததுள்ளது.

18 views

சென்னையில் திடீர் மழை

சென்னையில் 6 மாதங்களுக்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

57 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.