பழுதடைந்து காணப்படும் சுனாமி குடியிருப்புகள் - அச்சத்தில் வாழும் மீனவர்கள்...
வேதாரண்யத்தில், பழுதடைந்த சுனாமி குடியிருப்புகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுக்காவில் உள்ள வெள்ளப்பள்ளத்தில், சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தொண்டு நிறுவனங்களால், 2010-ம் ஆண்டு 371 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு வீடும், 320 சதுரடியில், 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, இந்த வீடுகளில், மேற்கூரை காரைகள், பக்கவாட்டு சுவர்கள் பெயர்ந்து கொட்டத் தொடங்கின. பல நேரங்களில் தூங்கும் போது சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர். இதனால், பழைய வீடுகளை உடனடியாக அகற்றிவிட்டு புதிய வீடுகட்டித்தர வேண்டும் என தமிழக அரசுக்கு, அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story