சுந்தர்பிச்சையை தொடர்ந்து கூகுள் நிறுவனத்தில் இணைந்த தமிழர்...

சுந்தர் பிச்சையை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த மற்றொருவரை பெரிய பதவிக்கு தேர்வு செய்துள்ளது கூகுள் நிறுவனம்.
சுந்தர்பிச்சையை தொடர்ந்து கூகுள் நிறுவனத்தில் இணைந்த தமிழர்...
x
* சர்வதேச நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளை அலங்கரிப்பதில் இந்தியர்களின் பங்கு அதிகரித்துள்ளது. பெப்சிகோ நிறுவனத்தின் இந்திரா நூயி,
காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரான்சிஸ்கோ டிசோசா, அடோப் நிறுவனத்தின் சாந்தனு நாராயண் ஆகியோர் சர்வதேச நிறுவனங்களில் இருக்கும் இந்திய தலைவர்கள் ஆவார்கள்.

* அதேபோல் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்த பிரபாகர் ராகவன்  தற்போது இணைந்துள்ளார்.

* 7 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக மதிப்பை கொண்டுள்ள, கூகுள் விளம்பர வர்த்தக பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பிரபாகர் ராகவன் சென்னையில் பிறந்தவர்.

* சென்னை ஐஐடியில் பட்டப்படிப்பை முடித்த அவர், அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை முடித்தார். கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்வதற்கு முன்பு யாகூ லேப்ஸ் மற்றும் ஐபிஎம் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுந்தர் பிச்சை, விளம்பர வர்த்தக பிரிவுக்கு பிரபாகர் ராகவனை விட, வேறு ஒருவர் மாற்றாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

* பிரபாகர் நம்பமுடியாத மேலாண்மை அனுபவமும் ஆழ்ந்த தொழில்நுட்ப நிபுணத்துவமும் பெற்றவர் எனவும் சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.

கூகுள் நிறுவனத்தில் மேலும் ஒரு தமிழர்

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். கூகுள் நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்த பிரபாகர் ராகவன்  இணைந்துள்ளார். கூகுள் விளம்பர வர்த்தக பிரிவின் தலைவராக பிரபாகர் ராகவன் நியமனம். சென்னை ஐஐடியில் பட்டப்படிப்புகலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு யாகூ லேப்ஸ், ஐபிஎம் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்