வகுப்பறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி

சிதம்பரம் அருகே கல்லூரி மாணவி வகுப்பறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வகுப்பறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி  மாணவி
x
சிதம்பரம் அருகே சி. முட்லூரில் உள்ள அரசு கல்லூரியில் பரங்கிப்பேட்டை அகரம் கிராமத்தை சேர்ந்த சுப்புலட்சுமி என்ற மாணவி இரண்டாம்  ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு சென்ற 
அப்பெண் துப்பட்டாவால் வகுப்பறையில் தூக்கிட்டு கொண்டதாக கூறப்படுகிறது. உயிருக்கு போராடிய அப்பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.  

தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என்று கூறி உடலை வாங்க மாணவியின் உறவினர்கள் மறுத்தனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து உடலை பெற்று சென்றனர்.  


Next Story

மேலும் செய்திகள்