ஜாக்டோ ஜியோ ஊழியர்கள் போராட்டம் - 5 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

அரசின் எச்சரிக்கையை மீறி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 90 சதவீதம் பேர், வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜாக்டோ ஜியோ ஊழியர்கள் போராட்டம் - 5 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
x
பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு  எடுக்கும் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர். அத்துடன், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் மேற்கொண்டனர். அந்த வரிசையில் சென்னை எழிலகத்தில், ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் தலைமையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். பின்னர் பேசிய தாமோதரன், உடனடியாக அரசு அழைத்து பேசி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டு கொண்டார்.  


Next Story

மேலும் செய்திகள்