ஆபத்தை உணராமல் எரிவாயு நிரப்பும் ஊழியர் : வேகமாகப் பரவும் வீடியோ

சமையல் எரிவாயு ஏஜென்சி நிறுவனத்தின் குடோனில், ஊழியர் ஒருவர் வர்த்தக உபயோகத்திற்கான சிலிண்டரில் இருந்து எரிவாயுவை 5 கிலோ சிலிண்டருக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் நிரப்பும் வீடியோ தற்போது வேகமாகப் பரவி வருகிறது.
ஆபத்தை உணராமல் எரிவாயு நிரப்பும் ஊழியர் : வேகமாகப் பரவும் வீடியோ
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள, சமையல் எரிவாயு ஏஜென்சி நிறுவனத்தின் குடோன், செண்பகபுதூர் கிராமம் அருகே உள்ளது. இந்த குடோனில், ஊழியர் ஒருவர், வர்த்தக உபயோகத்திற்கான சிலிண்டரில் இருந்து, எரிவாயுவை 5 கிலோ சிலிண்டருக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் நிரப்பும் வீடியோ தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்