மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தால் குண்டர் சட்டம் - எச்சரிக்கை விடுக்கும் தமிழக அரசின் அரசாரணை

மணல் கடத்தலுக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில் அரசாணை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தால் குண்டர் சட்டம் - எச்சரிக்கை விடுக்கும் தமிழக அரசின் அரசாரணை
x
மணல் கடத்தில் வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்டம்   துறிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த பாபு என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்து  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை  ரத்து செய்யக்கோரி பாபுவின் மனைவி வேதியம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், ராமதிலகம் அடங்கிய அமர்வு , இது தொடர்பான அரசாணையை பிறப்பிக்க தமிழக அரசுக்கு  உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மணல் கடத்தலுக்கு உடந்தையாக செயல்படும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதை தீவிரமாக பின்பற்ற அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த அரசாணையின் நகலும் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்