தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
x
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதுபோல, வரும் 6ம் தேதியன்று, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்தம் உருவாக இருப்பதால், ஆழ்கடல் பகுதிகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள் 5ம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்