3 உயிர்களை பறித்த ஏ.சி கேஸ் கசிவு - தடுப்பது எப்படி?

ஏ.சி யில் உள்ள வடிகட்டி தடுப்பில் தூசி அதிக அளவில் சேரும் போது, அதை சீரான இடைவெளியில் சுத்தம் செய்வது அவசியம்.
3 உயிர்களை பறித்த ஏ.சி கேஸ் கசிவு - தடுப்பது எப்படி?
x
சென்னை  கோயம்பேடு பகுதியில் வசித்து வந்தவர் சரவணன். இவரது மனைவி கலையரசி மற்றும் 8 வயது மகன் கார்த்திகேயன் ஆகியோர் திங்கட்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர். அடுத்த நாள் காலை 3 பேரும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏசியில் இருந்த கேஸ் கசிவு காரணமாகவே அவர்கள் 3 பேரும் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்த போது அவர்கள் தவறான முறையில் ஏசியை பயன்படுத்தியதே காரணம் என்கிறார்கள் அக்கம்பக்கத்தினர். மின்தடை ஏற்பட்ட போது அவர்கள் ஜெனரேட்டரை கொண்டு ஏசியை இயக்கியதாகவும் இதன் காரணமாகவே  விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஜெனரேட்டரில் இருந்து வெளி வரும் புகையும், ஏசியில் இருந்து வெளிவரும் காற்றும் ஒன்றுக்கொன்று கலந்து வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்தியதால் தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார்கள். சீசனுக்கு தகுந்தார்போல மின்சாதன பொருட்களையும் பராமரிக்க வேண்டியது இங்கு அவசியமான ஒன்று. முறையான இடைவெளியில் மின்சாதன பொருட்களை பழுது நீக்கி சரிசெய்து கொள்வதன் மூலம் விபத்துகளை தவிர்க்க முடியும் என்கிறார் ஏசி தொழில்நுட்ப வல்லுநர் கார்த்தி.. சென்னை  கோயம்பேடு பகுதியில் வசித்து வந்தவர் சரவணன். இவரது மனைவி கலையரசி மற்றும் 8 வயது மகன் கார்த்திகேயன் ஆகியோர் திங்கட்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர். அடுத்த நாள் காலை 3 பேரும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏசியில் இருந்த கேஸ் கசிவு காரணமாகவே அவர்கள் 3 பேரும் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்த போது அவர்கள் தவறான முறையில் ஏசியை பயன்படுத்தியதே காரணம் என்கிறார்கள் அக்கம்பக்கத்தினர். மின்தடை ஏற்பட்ட போது அவர்கள் ஜெனரேட்டரை கொண்டு ஏசியை இயக்கியதாகவும் இதன் காரணமாகவே  விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஜெனரேட்டரில் இருந்து வெளி வரும் புகையும், ஏசியில் இருந்து வெளிவரும் காற்றும் ஒன்றுக்கொன்று கலந்து வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்தியதால் தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார்கள். சீசனுக்கு தகுந்தார்போல மின்சாதன பொருட்களையும் பராமரிக்க வேண்டியது இங்கு அவசியமான ஒன்று. முறையான இடைவெளியில் மின்சாதன பொருட்களை பழுது நீக்கி சரிசெய்து கொள்வதன் மூலம்வி பத்துகளை தவிர்க்க முடியும் என்கிறார் ஏசி தொழில்நுட்ப வல்லுநர் கார்த்தி.. 

நவீன வசதிகள் நமக்கு எந்த அளவுக்கு முக்கியமோ அதைப்பற்றி முழுமையாக தெரிந்து  கொள்வதும் அவசியம்.. ஒவ்வொரு சீசனுக்கும் நமக்கு தேவையான பொருட்களை முறையான பரிசோதனைக்கு பிறகு பயன்படுத்துவதன் மூலம் உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்..


ஏ.சியில் இருந்து கேஸ் எவ்வாறு கசிகிறது?

ஏ.சி யில் உள்ள வடிகட்டி தடுப்பில் தூசி அதிக அளவில் சேரும் போது, அதை சீரான இடைவெளியில் சுத்தம் செய்வது அவசியம். நாம் பயன்படுத்தும் ஏ.சி-யின் உள்ளே  தூசி  சேரும் போது ஏ.சி-யின் உள்ளே பிற உபகரணங்களும் பாதிப்புக்கு உள்ளாகிறது. நாம் பயன்படுத்தும் ஏ.சி யின் குளிர் அளவு 18,16 போன்ற எண்ணிக்கையில் வைக்கும் போது, அதன் செயல்பாடு ஓய்வுன்றி 
தொடர்ச்சியாக இயங்கும். அப்போது குழாய் இணைப்பு உள்ள இடத்தில் இருந்து Freon என்ற வாயு கசியும். அந்த காற்றை நாம் சுவாசித்தால், உடல் பாதிப்பிற்கு உள்ளாகிறது (மங்கலாக்கப்பட்ட பார்வை, மார்பு வலி, தலைச்சுற்றல், தலைவலி, மூச்சி திணறல், சுவாசம், குமட்டல் மற்றும் வாந்தி , உணர்வு இழப்பு). சில சமயம் உயிருக்கு கூட பாதிப்பு ஏற்படும்.

ஏ.சியை  நம் வீடுகளில் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

* ஏ.சி  தொழில்நுட்ப வல்லுனரின் அறிவுரையின் படி, வீட்டின் அளவு மற்றும் மின்சார வசதியை பொறுத்து, சரியான அளவு ஏ.சி-யை வைக்க வேண்டும்.

* Ventilation Unit எனப்படும், வீட்டுக்கு வெளியே வைக்கப்படும் ஏ.சி-யின் பாகம் பாதுகாப்பான, திறந்த வெளியில் இருக்க வேண்டும்.

* சீரான இடைவேளையில் ஏ.சியில் உள்ள வடிகட்டி தூசியை சுத்தம் செய்வது அவசியம்.

* நாம் தூங்கும் அறையில் குளிரின் அளவு சரியாக வரவில்லை என்றால் உடனடியாக ஏ.சி  மெக்கானிக் மூலம் சரிபார்த்துக் கொள்வது நல்லது.


Next Story

மேலும் செய்திகள்