குப்பை தொட்டி முன் கோலம் போட்ட நெல்லை மாநகராட்சி...

நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில், 25 முதல் 30 இடங்களில் குப்பை தொட்டி முன் மாநகராட்சி அதிகாரிகளால் கோலம் போடப்படுகிறது.
குப்பை தொட்டி முன் கோலம் போட்ட நெல்லை மாநகராட்சி...
x
நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில், 25 முதல் 30 இடங்களில் குப்பை தொட்டி முன் மாநகராட்சி அதிகாரிகளால் கோலம் போடப்படுகிறது. 55 வார்டுகளிலும், தேங்கும் குப்பைகள் சுகாதார ஊழியர்கள் மூலம் தினமும் வீடுகளுக்கு சென்று பெறப்படுகிறது. மேலும் இரண்டு, மூன்று தெருக்களுக்கு சேர்ந்தார் போல குப்பை தொட்டியும் மாநாகராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வசதிகள் உள்ள போதிலும், இதையும் தாண்டி தவிர்க்க முடியாத காரணங்களால் சாலைகளில், குப்பையை தொட்டியில் போடாமல், பலர் அதன் அருகே வீசிவிட்டு சென்றுவிடுகின்றனர்.. இதை கட்டுப்படுத்த  அதிகாரிகள் எடுத்த முயற்சியே கோலம் போடும் திட்டம்..  குப்பை தொட்டி அருகே அழகாக கோலம் போடப்படுவதால், பலர் குப்பைகளை சிந்தாமல், தொட்டிக்குள் போடுவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அழகான கோலம் போட்டுகுப்பை தொட்டிகளை சுற்றி  குப்பைகளை கொட்டியும்,  போடப்படுகிறது. இந்த நடைமுறையை மாற்ற குப்பை தொட்டி முன் கோலம் போடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சி பொதுமக்களிடம் நல்ல மாற்றத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்