சாலை விபத்துகளில் உயிரிழக்கும் பாதசாரிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்...

சாலை விபத்துகளில் உயிரிழக்கும் பாதசாரிகளின் எண்ணிக்கையில், இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சாலை விபத்துகளில் உயிரிழக்கும் பாதசாரிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்...
x
* சாலை விபத்துகளில் இறந்த பாதசாரிகள் பற்றிய புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில், இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டில் மட்டும் 12 ஆயிரத்து 330 பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த எண்ணிக்கை கடந்த  ஆண்டில் மட்டும் 20 ஆயிரத்து 457 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், கடந்த ஆண்டு மட்டும் தினமும் 56 பாதசாரிகள், சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

* கடந்த 2017ம் ஆண்டு, இந்தியாவிலேயே அதிகபட்சமாக, தமிழகத்தில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 3 ஆயிரத்து 507 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்து, மகாராஷ்டிராவில்  ஆயிரத்து 831 பேரும், ஆந்திராவில் ஆயிரத்து 379 பேரும் உயிரிழந்துள்ளனர்.

* இருசக்கர வாகன விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 6 ஆயிரத்து 329 இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளனர்.

* உத்தரபிரதேசத்தில் இந்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 699 ஆகவும், மகாராஷ்டிராவில் 4 ஆயிரத்து 659 ஆகவும் உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்