வங்கி கிளையில் புகுந்து லாக்கரை உடைக்க முயற்சி : கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்

மயிலாடுதுறையில் வங்கிக்கிளை ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயற்சித்தபோது அபாய சங்கு ஒலித்தால் தப்பி ஓடியுள்ளனர்.
வங்கி கிளையில் புகுந்து லாக்கரை உடைக்க முயற்சி :  கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்
x
மயிலாடுதுறையில் வங்கிக்கிளை ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயற்சித்தபோது அபாய சங்கு ஒலித்தால் தப்பி ஓடியுள்ளனர். கூறைநாடு பகுதியில் இந்தியன் வங்கியிலிருந்து இரவு 8 மணி அளவில் அபாய சங்கு ஒலித்துள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், வங்கிக்கதவின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு, வங்கிக்குள் சென்று பார்த்தபோது அங்கு யாரும் இல்லை என்பது தெரிய வந்தது. அங்குள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அபாய சங்கு ஒலித்ததால் வங்கி கொள்ளை திட்டத்தை கைவிட்டு கொள்ளையர்கள் தப்பி
ஓடியிருக்கலாம் என கருதப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்