எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பல்வேறு திட்டங்களை அறிவித்தார் தமிழக முதலமைச்சர்

சென்னையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பல்வேறு திட்டங்களை அறிவித்தார் தமிழக முதலமைச்சர்
x
* சென்னையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

* சென்னைக்கு அருகில் புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.

* தமிழகத்தில் உள்ள நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள தமிழ் நாடு நீர்வள் ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும்  நதிகளை சீரமைத்தல் கழகம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்.

* விவசாயிகள் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியில் காய்கறிகளை பயிர் செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில் முதலமைச்சரின் வீட்டு காய்கறி உற்பத்தி திட்டம் கிராமப்புறங்களில் தொடங்கப்படும்.

* ஏழை எளிய மக்களுக்காக பள்ளிக்கரணையில் 100 படுக்கைகள் கொண்ட புறநகர் மருத்துவமனை 31 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்

* கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு 12  அறுவை அரங்கங்கள், 260 படுக்கை வசதிகொண்ட அடித்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட புதிய கட்டடம், 141 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்

* மேலும், செயற்கை சுவாச கருவிகள் அல்ட்ரா ஸ்கேன் கருவிகள் உள்ளிட்ட அதிநவீன கருவிகள் 134 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்

* சென்னையின் புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக 45 கிலோ மீட்டர் நீளம் முக்கிய சாலைகளை அகலப்படுத்தி, மேம்பாடு செய்யும் பணிகள் 344 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்

* சென்னை அடையாறில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சர்தார் பட்டேல் சாலையில் மத்திய கைலாஷ் பகுதியில் சாலை மேம்பாலம் கட்ட 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்

* எம்ஜிஆரின் இல்லமான ராமாவரம் தோட்டம் அமைந்துள்ள 20 கிலோ மீட்டர் நீள மவுண்ட் பூந்தமல்லி ஆவடி நெடுஞ்சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
Next Story

மேலும் செய்திகள்