103 வயது முதியவருக்கு மரியாதை செய்து ஆச்சரியத்தில் ஆழ்த்திய கிராமமக்கள்

புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பூர்ணாபிஷேகம் நடத்தி 103 வயதை தொட்ட முதியவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
103 வயது முதியவருக்கு மரியாதை செய்து ஆச்சரியத்தில் ஆழ்த்திய கிராமமக்கள்
x
புதுக்கோட்டை மாவட்டம் மட்டங்கால் கிராமத்தை சேர்ந்த சண்முகம் இன்று 103வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதனையடுத்து சண்முகத்தின் உறவினர்கள் மற்றும்  கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பூர்ணாபிஷேகம் நடத்தினர்.103 வயதிலும் புத்தாடை உடுத்தி கம்பீரமாக அமர்ந்திருந்த சண்முகத்திற்கு, அவரது மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகள் உள்ளிட்ட 50 பேர் மாலை அணிவித்தும், காலில் விழுந்தும் ஆசீர்வாதம் வாங்கினர். பின்னர் மட்டங்கால் கிராமத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சண்முகத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்