திருப்பூர் : தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது

திருப்பூர் சிடிசி சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் மூன்றுபேரும் வந்த கொள்ளையர்கள் என தெரியவந்துள்ளது.
திருப்பூர் : தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது
x
திருப்பூர் சிடிசி சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த கிரிதரன், பிரசாத், கிஷோர் ஆகிய 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் மூன்றுபேரும், மக்களின் கவனத்தை திசைதிருப்பி பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வந்த கொள்ளையர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சாலையில் நிறுத்தியுள்ள கார்களை திறந்து அதில் உள்ள பொருட்களையும் திருடி வந்ததையும் அவர்கள் ஒப்புகொண்டுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து 30 சவரன் நகை மற்றும் 1 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்