மன நலம் பாதிக்கப்பட்டவர் மீது, கடும் தாக்குதல் : ரத்த வெள்ளத்தில் கிடக்கும் வீடியோ காட்சி...

பொது மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில், மன நலம் பாதிக்கப்பட்டவர் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்ட காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன நலம் பாதிக்கப்பட்டவர் மீது, கடும் தாக்குதல் : ரத்த வெள்ளத்தில் கிடக்கும் வீடியோ காட்சி...
x
பொது மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில், மன நலம் பாதிக்கப்பட்டவர் மீது, கடும் தாக்குதல் நடத்தப்பட்ட காட்சி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் பேருந்து நிலையத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட மாஸ்கோ என்பவரை, அங்கு உதவியாளராக பணியாற்றும் குமார் என்பவர், கடுமையாகத் தாக்கியுள்ளார். மதுபோதையில் மாஸ்கோ, பேருந்துகளுக்கு நடுவில் படுத்திருந்ததால், அவரை குமார் அடித்ததாக, கூறப்படுகிறது. மாஸ்கோ ரத்தம் கொட்டிய நிலையில் இருக்கும் காட்சி, சமூக வலை தளத்தில் பரவியது. இதனைக் கண்ட காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், திருப்போரூர் காவல்துறையினரை விசாரிக்க உத்தரவிட்டார். 2 மணி நேர தேடுதலுக்குப் பின்னர், இருவரையும் பிடித்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்