ரன்வீர்ஷாவுக்கு சொந்தமாக தஞ்சையில் அரண்மனை?

தொழிலதிபர் ரன்வீர்ஷா தஞ்சை உள்ளிட்ட பல இடங்களில் அரண்மனைகள், பங்களாக்கள் வாங்கி குவித்திருப்பதால், அங்கெல்லாம் சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சோதனை செய்ய திட்டமிட்டு உள்ளது.
ரன்வீர்ஷாவுக்கு சொந்தமாக தஞ்சையில் அரண்மனை?
x
* சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கொடுத்த தகவலின் பேரில் சென்னை சைதாபேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2 நாட்களாக சோதனை நடத்தினர். இதில் ஐம்பொன் சிலைகள், கற்சிலைகள் மற்றும் தொன்மையான தூண்கள் சிக்கின. 

* இந்நிலையில், ரன்வீர்ஷா தொடர்பாக பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரன்வீர்ஷா தஞ்சை  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரண்மனைகள், பங்களாக்கள் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 

* தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள பழமைவாய்ந்த அரண்மனையை 10 ஆண்டுகளுக்கு முன்பே ரன்வீர்ஷா வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனைகள், பங்களாக்களில் சோதனை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்