மலர் சாகுபடியில் சாதனை புரிந்த இளைஞர்

நெற்பயிருக்கு பெயர் பெற்ற டெல்டா மாவட்டத்தில், செண்டுமலர் சாகுபடி செய்து கவனம் ஈர்த்துள்ள இளைஞரின், சாதனை தொகுப்பு.
மலர் சாகுபடியில் சாதனை புரிந்த இளைஞர்
x
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்று வட்டாரப் பகுதி, நெற்பயிர் சாகுபடிக்குத் தான் பெயர் பெற்றது. இங்கு, செண்டுமலர் சாகுபடி செய்து, கவனத்தை ஈர்த்துள்ளார் மாரிமுத்து என்ற இளைஞர். மன்னார்குடியில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பூத்துக் குலுங்கும் செண்டு மலர்கள், அந்த பகுதியை சோலைவனமாக மாற்றியுள்ளது. 

இதனை உருவாக்கிய மாரிமுத்து, வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தவர். 2010ம் ஆண்டு சொந்த ஊருக்கு திரும்பியவர், தந்தைக்கு உதவியாக விவசாய பணிகளை செய்து வந்தார். அப்போது, விவசாயத்தில் லாபம் பெற வழி தேடிய போது தான், இந்த செண்டு மலர்கள் சாகுபடி கை கொடுத்துள்ளது. 

இந்த மலர் சாகுபடிக்கு சொட்டு நீர் பாசனத்தைப் பயன்படுத்தி, லாபம் ஈட்டி வருகிறார் மாரிமுத்து.கோயில் திருவிழாக்கள், துக்க நிகழ்வுகளில் பயன்படுத்தப்பட்ட வந்த இந்த மலர்கள், தற்போது மேடை அலங்காரத்திலும், களை கட்டி வருகிறது. மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டால், மன்னார்குடியை 'மலர்களின் சந்தை'யாக மாற்றலாம் என, மாரிமுத்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்