ஓசூர் : விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஓசூர் அருகே சேவகானப்பள்ளியில் விஷவாயு தாக்கியதில் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஓசூர் : விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
x
தனியார் பேட்டரி கம்பெனியில் வேலை செய்துவரும் நகேஷ் என்ற இளைஞர் கழிவு நீர் தொட்டியை திறந்த போது விஷவாயு தாக்கி மயங்கி தொட்டிக்குள் விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற சென்ற மஞ்சுநாத் என்பவரும் விஷவாயு தாக்கி, தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், நீண்ட நேரம் போராடி இருவரது உடலையும் மீட்டனர். உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்கள் தனியார் கம்பெனியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்