சமையல் மாஸ்டர் தற்கொலை முயற்சி..!
முன்பணத்தை வட்டியுடன் கொடுக்குமாறு கேட்டு மிரட்டியதால் சமையல் மாஸ்டர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கேரளா மாநிலத்தில் 2 ஆண்டுகள் சமையல் பணியில் இருந்த நெல்லை மாவட்டதை சேர்ந்த வடிவேல்முருகன் அங்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து சொந்த ஊர் திரும்பிவிட்டர். இந்நிலையில் ஒன்றரை லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்து, அவரை அழைத்து சென்ற ராதாகிருஷ்ணன் என்பவர் முன்பணத்தை வட்டியுடன் சேர்த்து இரண்டரை லட்சமாக வழங்குமாறு மிரட்டியுள்ளார். தொடர் மிரட்டலை அடுத்து வடிவேல்முருகன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவரை உடனடியாக மீட்ட உறவினர்கள், மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story