சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண் 4 மணி நேரம் அலைக்கழிப்பு..!
ஆரணி அரசு மருத்துவமனையில் இரண்டு மருத்துவர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் அறுவை சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண் 4 மணி நேரம் அலைகழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு மருத்துவமனையில் 4 மருத்துவர்கள் பணியில் இருக்கும் நிலையில் 2 மருத்துவர்கள் விடுப்பில் உள்ளனர். இந்நிலையில் ஆரணியை சேர்ந்த திவ்யபாரதி என்ற பெண், பிரசவ வலி காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது மருத்துவமனையில் பணியில் இருந்த இரண்டு மருத்துவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் இருவரும் கர்ப்பிணி திவ்யபாரதியை கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
சுமார் நான்கு மணி நேரம் ஆகியும், திவ்யபாரதிக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவரின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து திவ்யபாரதி ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Next Story