கால்நடை பராமரிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

விரைவில் 75 ஆயிரம் பேருக்கு தலா 50 நாட்டுக்கோழிகள் இலவசமாக வழங்கப்படும் என உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கால்நடை பராமரிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
x
பேரிடர் காலத்தில் சிக்கிக் கொள்ளும் கால்நடைகளை மீட்பது குறித்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கம் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் துவங்கியது. இதில், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் சத்யகோபால் மற்றும் இத்தாலி, நேபாளம் உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த பேரிடர் ஆய்வாளர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில்,  தேசிய பேரிடர் மீட்பு குழுவின் நவீன கருவிகள் கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமா பல்கலைக் கழகத்துடன் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்தார். கால்நடை பராமரிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும், 75 ஆயிரம் பேருக்கு தலா 50 நாட்டுக்கோழிகள் இலவசமாக வழங்க உள்ளதாகவும் கூறினார். 



Next Story

மேலும் செய்திகள்