தொழிலதிபரை கடத்திய கடத்தல்காரர்களை கதிகலங்க வைத்த காஞ்சி போலீஸ்...

50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு தொழிலதிபர் கடத்தப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையால் கதி கலங்கிய கடத்தல்காரர்கள் அவரை இறக்கிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலதிபரை கடத்திய கடத்தல்காரர்களை கதிகலங்க வைத்த காஞ்சி போலீஸ்...
x
* காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் பிரபல பல்பொருள் அங்காடி உரிமையாளர் பசூல் ரகுமானை கடத்திய கும்பல் ஒன்று, அவரின் மகன் ஜெயாரூதீனை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளது. பயந்து போன ஜெயாரூதீன், காஞ்சி மாவட்ட கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானியிடம் புகார் தெரிவித்துள்ளார். 

* அப்போது கடத்தல்காரரிடம் இருந்து வந்த போனை, துண்டிக்காமல் தொடர்ந்து பேசுமாறு ஜெயாரூதீனிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர், செல்போன் டவரை ஆய்வு செய்ததில், கடத்தல்காரர்கள் கிராம உட்புற சாலைகளை மட்டுமே பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின் தொடர்ந்த காவல்துறை, செய்யாறு அடுத்த பிரம்மதேசம் அருகே கடத்தல்காரர்களை சுற்றி வளைத்தது.  கதி கலங்கிய கடத்தல்காரர்கள், பசூல் ரகுமானை வயல்வெளியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர். சுமார் 5 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு தொழிலதிபரை பத்திரமாக மீட்ட காஞ்சி காவல்துறைக்கு பாராட்டு குவிந்து வருகின்றன. 



எவளோ பணம் கேட்டாலும் கொடுக்கிறேன் - கடத்தல்காரனிடம் கெஞ்சிய மகன் 

காஞ்சிபுரத்தில் தொழிலதிபர் பசூல் ரகுமான் கடத்தப்பட்ட சம்பவத்தில் அவரது மகன் ஜெயாரூதினிடம் கடத்தல் கும்பல் பணம் கேட்டு மிரட்டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்