நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் ஆஜர்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுக சாமி கமிஷனில் இன்று சென்னை அப்பல்லோ டாக்டர்கள் ராமச்சந்திரன், அர்ச்சனா, நளினி, உள்ளிட்ட 8 பேர் ஆஜர் ஆனார்கள்.
நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் ஆஜர்
x
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுக சாமி கமிஷனில், சென்னை அப்பல்லோ டாக்டர்கள் ராமச்சந்திரன், அர்ச்சனா, நளினி, சினேகா, ஸ்ரீ ரமாதேவி , ஷில்பா, நர்சுகள் பிரேமா ஆண்டனி, விஜயலட்சுமி என மொத்தம் 8 பேர் ஆஜர் ஆனார்கள். எழிலக வளாகம் கலச மஹாலில் அமைந்துள்ள நீதிபதியின் அறையில் ஆஜர் ஆன டாக்டர்கள் - நர்சுகளிடம், சசிகலாவின் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோ உண்மையானது தான் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

நாளை முதல் 3 நாட்களுக்கு யார், யார் ஆஜர்? - பட்டியலை வெளியிட்டார், நீதிபதி ஆறுமுகசாமி

இதனிடையே, நாளை 25 ம் தேதி, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் ஆஜர் ஆக டாக்டர்கல் பத்மாவதி, வெங்கட்ராமன், வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் மற்றும் அப்பல்லோ நிர்வாக அதிகாரி சுப்பையை விசுவநாதன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. 26 ம் தேதி, டாக்டர்கள் சுப்பிரமணியன், சஜன் கே ஹெக்டே, கே.ஆர். பழனிச்சாமி, வி.என். அருள் செல்வன், புவனேஷ்வரி சங்கர், பாபு மனோகர் ஆகியோரும், 27 ம் தேதி, டாக்டர்கள் ரவிக்குமார், பாஸ்கரன், செந்தில்குமார், சாய் சதீஷ் ஆகியோரும் நேரில் ஆஜராகுமாறு, நீதிபதி ஆறுமுகசாமி சம்மன் அனுப்பி உள்ளார். எனவே, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்