"மலேசிய மணலுக்கு வரவேற்பு இல்லை" - தரத்தில் சந்தேகம் உள்ளதாக குற்றச்சாட்டு

மலேசியாவில் இருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கு வரவேற்பு இல்லாத நிலையில், அதன் தரத்தில் சந்தேகம் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மலேசிய மணலுக்கு வரவேற்பு இல்லை - தரத்தில் சந்தேகம் உள்ளதாக குற்றச்சாட்டு
x
ஆற்று மணலுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால், மலேசியாவில் இருந்து, எண்ணூர் துறைமுகத்திற்கு, சுமார் 56 ஆயிரத்து 750 மெட்ரிக் டன், மணல் கொண்டு வரப்பட்டது. ஆனால், இதன் தரத்தின் மீது சந்தேகம் அடைந்துள்ள பொது மக்கள், விலைக்கு வாங்க முன்வரவில்லை. கடந்த 10 நாட்களில் 4 நபர்கள் மட்டுமே, மணல் கொள்முதல் செய்ய, ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனர். இதனால், தமிழக அரசுக்கு சுமார் 548 கோடி ரூபாய் இழப்பு என்று கூறப்படுகிறது. இந்த மணல் கட்டுமான பணிக்கு உகந்தது தானா என்று, ஆய்வு செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்