தந்தி டிவி செய்தி எதிரொலி: 17 லட்சம் ரூபாய் செலவில் பள்ளிக்கு சுற்றுச்சுவர்

விழுப்புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் மது அருந்துபவர்களின் கூடாரமாக மாறிவிட்டது.
தந்தி டிவி செய்தி எதிரொலி: 17 லட்சம் ரூபாய் செலவில் பள்ளிக்கு சுற்றுச்சுவர்
x
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள கீழ்செவளாம்பாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் மது அருந்துபவர்களின் கூடாரமாக மாறிவிட்டது. இந்த கட்டிடமானது பழுதடைந்துள்ளதால் புதிய கட்டடம் கட்ட வேண்டும் என தந்தி டிவியில் செய்தி வெளியானது. இதையடுத்து தற்போது சுமார் 17 லட்சம் ரூபாய் செலவில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தந்தி டிவிக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்