தமிழகத்தில் மணல் அதிகளவில் எடுக்கப்படுகிறது - உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி

தமிழகத்தில் ஆற்றோரங்களில் மணல் அதிகளவில் எடுக்கப்படுவதாகவும், இதனால் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மணல் அதிகளவில் எடுக்கப்படுகிறது - உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி
x
* திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் உள்ள சர்வதேச கருத்தரங்கு நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி பங்கேற்று பேசினார். அப்போது,இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பெண்கள் முன்னேற்றத்திற்கான பல அம்சங்களை கொண்டுள்ளதாக கூறினார். 

* இந்திய நீதித்துறையில் உயர் பதவியில் பெண்கள் அதிகளவில் வர வேண்டும் என்றார். அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட பிறகு, உச்சநீதிமன்றத்தில் ஒரே நேரத்தில் 3 பெண்கள் நீதிபதிகளாக பதவி ஏற்றது இதுவே முதல்முறை என்றும் இந்திரா பானர்ஜி தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் ஆற்றோரங்களில் மணல் அதிகளவில் எடுக்கப்படுவதாகவும், இதனால் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்