பப்பாளி சாகுபடியில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்

சேலம் அருகே பப்பாளி சாகுபடியில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர் குறித்த ஒரு தொகுப்பு
பப்பாளி சாகுபடியில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்
x
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். 23 வயதான இவர், இளங்கலை பட்டம் முடித்த பிறகு விவசாய தொழிலை தன் கையில் எடுத்துள்ளார். 

ஆரம்ப காலத்தில் தன் தந்தைக்கு உதவியாக விவசாயத்தை செய்து வந்த அவர், இப்போது அதில் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். தங்கள் விவசாய நிலமான 2 ஏக்கர் பரப்பில் பப்பாளியை சாகுபடி செய்துள்ளார் அஜித்குமார். தன் நிலத்தில் நடவு செய்திருந்த பப்பாளி மரங்கள் 7 மாதத்தில் அறுவடை நிலையை எட்டியிருக்கிறது. 

தன் தோட்டத்திற்கான பணிகளை தானே செய்து வருவதால் பராமரிப்பு செலவும் குறைவுதான் என்கிறார் இந்த பட்டதாரி விவசாயி. ஒவ்வொரு மரத்தில் இருந்தும் பறிக்கப்படும் பழங்களை எல்லாம் மொத்தமாக வியாபாரிகளிடம் சென்று கொடுத்து விடும் அஜித்குமார், இதன் மூலம் மாதம் 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை லாபம் கிடைப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவிக்கிறார். 

படிப்புக்கு ஏற்ற வேலைதான் வேண்டும் என காத்திருக்காமல் இன்று தனக்கு பிடித்த தொழிலை கையில் எடுத்து அதில் உச்சம் தொட்டிருக்கிறார் இந்த இளைஞர்.

Next Story

மேலும் செய்திகள்