பேராசிரியை நிர்மலா தேவி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் அவர் உட்பட 3 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பேராசிரியை நிர்மலா தேவி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
x
மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக அருப்புக்கோட்டையை சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியரான கருப்பசாமி, உதவி பேராசிரியர் முருகன் ஆகியோர் மீது புகார் எழுந்தது. 

இந்த நிலையில் அவர்கள் 3 பேர் மீதும் 10 பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாணவிகளை பாலியலுக்கு பயன்படுத்த திட்டமிட்டு அதற்காக தன் கட்டுப்பாட்டில் உள்ள மாணவிகளுக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவிகளை பாலியலுக்கு பயன்படுத்துவதன் மூலம் தனக்கு பதவி கிடைக்கும் என்பதால் நிர்மலா தேவி உள்ளிட்டோர் கூட்டு சதியில் ஈடுபட்டது உறுதியாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

மாணவிகளுக்கு பணமும், கல்வி நிலையத்தில் இடம் மற்றும் வேலை வாய்ப்புகள் வாங்கித் தருவதாகவும் கூறி, தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த முயன்றதாகவும் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததற்காக இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் படி குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவறு என தெரிந்தே மாணவிகளுக்கு பாலியல் தொடர்பான குறுந்தகவல்களை அனுப்பியதாகவும், குற்றம் சாட்டப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்